சினிமா

இவருக்கு மட்டும் நல்ல நல்ல படமா அமையுதே… ! நளன் குமாரசுவாமியுடன் இணையும் கார்த்தி !

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி சிவகுமார். நடிகர் சூர்யாவின் தம்பியும்  பிரபல தமிழ் சினிமா நடிகர் சிவகுமாரின் மகனுமான  இவர்  இயக்குனர் அமீரின் பருத்திவீரன் படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன்  பையா  சிறுத்தை  ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நான் மகான் அல்ல’, ‘கைதி’, போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின்  இரண்டாம் பாகமானது வருகின்ற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில்  ஜப்பான் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார் . இப்படமானது இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளை நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் கைதி படத்தின் அடுத்த பாகமான கைதி 2  ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ்  தளபதி விஜய் வைத்து தளபதி 67 படம்  தொடங்க உள்ளதால் அதனை அடுத்து கைது 2 படப்பிடிப்பு  தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம்  பிரபலமான இயக்குனர் நலன் குமாரசாமியின் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’  போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் நலன் குமாரசுவாமி. தமிழ் சினிமாவின் வெற்றி படமான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு  திரைக்கதை எழுதியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது .

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இயக்க உள்ள இந்த புதிய படம் கார்த்தி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்புகள்  நிறைவடைந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தவிர கைதி 2  மற்றும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவற்றிலும்  தொடர்ந்து நடிக்க இருக்கிறார் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் இருக்கும்  பிசியான நடிகர்களில் ஒருவர் ஆவார்.

இவர் நடித்த ‘விருமன்’ படம்  எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே கார்த்தி அவர்களின் படங்களில்  கதை தேர்வு மிக நேர்த்தியாக இருக்கும். இவருக்கு மட்டும் எப்படி இதே மாதிரியான கதைகள் கிடைக்கின்றன என்று  மற்ற நடிகர்கள் பொறாமைப்படும் அளவிற்கு  சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனது ஆரம்ப காலங்களில் பிரபலச தமிழ் இயக்குனரான மணிரத்தினம் அவர்களிடம் உதவியாளராக  பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top