கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகர்களுடன் சமீப காலமாக ஜோடி போடாமல் உமன் சென்ட்ரிக் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 3 படங்கள் வெளியாகி விட்டன. டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் ரன் பேபி ரன் என படங்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், கனா, க/பெ. ரணசிங்கம் படங்கள் ஓடிய அளவுக்கு சமீப காலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. ஆனாலும், விடா முயற்சியாக தொடர்ந்து புதிய படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
அதன் டிரைலரை இன்று அருண் ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீரியசான படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் காமெடியான கதையை தேர்வு செய்து இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் முதலில் என்னை வேண்டவே வேண்டாம் என இயக்குநர் சார்லஸ் சொல்லிட்டு கிளம்பி விட்டார்.
அதன் பிறகு அவரை நான் அழைத்ததுமே தனது கோபத்தை விட்டு விட்டு என்னை சந்தித்தார். அதன் பின்னர் இந்த படம் ஆரம்பித்து தற்போது ரிலீசுக்கே வந்து விட்டது. கோபத்தால் நான் நிறைய விஷயங்களை இழந்து உள்ளேன். கோபம் நம்மை ஒன்னுமில்லாமல் கெடுத்து விடும். கோபத்தை விட்டு விட்டு கூலாக இருந்தால், பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் என தனது கோப சுபாவத்தையும் சமீப காலமாக அதிலிருந்து தான் எப்படி மாறினேன் என்பது குறித்தும் பேசி பலரது கவனத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார்.
