தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் சரண் . தல அஜித் குமாரை வைத்து காதல் மன்னன் அமர்க்களம் அட்டகாசம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் . சியான் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெமினி படத்தின் இயக்குனரும் இவர்தான் .
சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் மற்றும் பிரசாந்த் இடையேயான மோதல் குறித்து பேசி இருக்கிறார் இவர் . கல்லூரி வாசல் திரைப்படத்தில் அஜித் மற்றும் பிரசாந்த் இருவரும் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . அஜித் மற்றும் பிரசாந்த் இடையே மோதல் இருப்பதாகவும் பிரசாந்த் அஜித்தை அவமானப்படுத்தியதாகவும் பல செய்திகள் வெளிவந்திருந்தன .
இயக்குனர் சரணின் பேட்டி அதையெல்லாம் மறுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது . அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் சரண் அஜித்துக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் அப்படியே ஒதுங்கி விடுவார் . அவர்கள் சார்ந்த இந்த விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டார் . இதுதான் அஜித்தின் குணம் .
ஆனால் பிரசாந்த் நடித்த பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட திரைப்படங்களை அவர் பார்த்திருக்கிறார் . மேலும் அஜித் மற்றும் பிரசாந்த் இடையே எந்த மோதலும் இல்லை என தெரிவித்துள்ளார் . இந்தப் பேட்டியில் அமர்க்களம் திரைப்படத்தின் போது நடந்த சில சுவாரசியமான தகவல்களையும் அஜித் மற்றும் ஷாலினி இடையேயான காதலைப் பற்றியும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் சரண் .
அந்த நேரத்தில் பிரசாந்த் வளர்ந்து வந்த ஒரு நடிகராக இருந்தார் அஜித் அப்போதுதான் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்த போராடிக் கொண்டிருந்தார் . இது போன்ற நேரத்தில் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக செய்திகள் பரவி வந்தன . ஆனால் அது இல்லை என்று அஜித்தின் மிக நெருங்கிய நண்பரும் இயக்குனருமான சரண் தற்போது தெரிவித்திருக்கிறார். அஜித்திற்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் முற்றாக ஒதுக்கி விடுவார் என்றும் அதைப் பற்றிய பேச்சுக்கே அவர் போக மாட்டார் எனவும் தெரிவித்திருக்கிறார் . ஆனால் பிரசாந்த் படங்களை அவர் பார்த்து வந்ததாகவும் சரண் தெரிவித்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே மோதல் என்பது ஒரு வதந்தியாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் நம்பப்படுகிறது