தளபதி 67 படத்திற்கு நடிப்பு அரக்கர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு டப் குடுக்கும் வகையில் அதை விட மெகா நடிகர்களை வைத்து ஜெயிலர் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் நெல்சன். பீஸ்ட் படத்தின் பெரும் தோல்விக்குப் பின் அவரை கலாய்துத் தள்ளினர் நெட்டிசன்கள்.
பீஸ்ட் படத்தின் ரிலீஸ்க்கு முன்பே நெல்சன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கை கோர்த்துவிட்டார். பீஸ்ட் வெளியான பின் அதைப் பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் அவரது படத்தை தொடர்வதில் தயங்கினார் என தகவல்கள் வெளியாகின. மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்தையை சரி பார்க்க கேட்டதாகவும் கூறுகின்றனர்.
இதெல்லாம் இயக்குனரை நெல்சனை மன ரீதியாக மிகவும் பாதித்திருக்கும். இந்த அவமாங்களை எல்லாம் ஈடுகட்டி அவர் வளர வேண்டும். அதற்காக தீவிரமாக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களில் வெறும் 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறாராம். ஜெயிலர் படத்தின் அப்டேட்கள் எதிர்பார்க்காத போது அடிக்கடி வருகிறது. இருப்பினும் பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை, அதனால் தான் அவ்வப்போது ஏதேனும் ஒரு அப்டேட்களை கொடுத்து வருகின்றனர் போல.
ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரியங்கா அருள் மோகன் லீட் நடிகர்களாக செயல்படுவதாக முதலில் கூறினர். பின்னர் அனைத்து இண்டஸ்ட்ரியிலும் இருந்து தலைசிறந்த நடிகர்களை இதில் சேர்த்து வருகிறது படக்குழு. கன்னட சினிமாவில் இருந்து ஷிவா ராஜ்குமார், தெலுங்கு சினிமாவில் இருந்து சுனில் மற்றும் மலையாளத்தில் இருந்து பெரிய கையான மோகன்லால் அழைக்கப்பட்டுள்ளார். படத்தில் மோகன்லால் சிறப்புத் தோற்றம் மட்டுமே தருகிறார்.
சிவகார்த்திகேயனும் கேமியோ செய்ய உள்ளதாக சொல்கின்றனர் ஆனால் அது வதந்தி எனத் தெரிகிறது. கடைசியாக பாலிவுட்டில் இருந்து அமித்தா பச்சனை அழைத்து ஓர் சிறப்பத் தோற்றம் தரும் எண்ணத்தில் படக்குழு இருந்தது. ஆனால் அதுப் பற்றி இன்னும் எதுவும் அதிகாரபூர்வ செய்திகள் வரவில்லை. இன்று ஹிந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப் படத்தில் இணைந்துள்ள செய்தியை படக்குழு பதிவிட்டுள்ளது. ஒருவேளை அமித்தா பச்சன் செய்ய வேண்டிய ரோலை தான் இவர் செய்கிறாரோ என்னமோ.
ஜெயிலர் படம் மிகப் பெரிய ஜாம்பவான் நடிகர்களை கொண்டுள்ளது. படம் சிறப்பாக அமைதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஜாக்பாட் தான். தவறினாலும் இந்தப் பட்டாளத்தைக் காண ரசிகர்கள் விரைந்து வருவர் என்ற எண்ணத்தில் இப்படி செய்கிறார்கள் போல. படம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆகஸ்டுக்கு தள்ளிப் போயுள்ளது.