Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாநாடு எங்கும் சுற்றும் ஜெய்லர் படக்குழு.. மங்களுரில் முக்கிய திட்டம்!

நாடு எங்கும் சுற்றும் ஜெய்லர் படக்குழு.. மங்களுரில் முக்கிய திட்டம்!

- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் செய்த திரைப்படத்தைப் பற்றிய சில அப்டேட்ஸ்கள் தற்பொழுது வந்து கொண்டிருக்கிறது. படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து கன்னட திரைப்பட நடிகர் சிவராஜ்குமார், மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால், ஹிந்தி திரைப்பட நடிகர் ஜேக் சரீப் போன்ற பல மாநிலங்களால் உள்ள முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இதனால் இந்த திரைப்படம் பிற மொழிகளிலும்  நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, கிங்ஸ்லி  போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு மிக விரைவாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களில் இந்த திரைப்படம் ராஜஸ்தான் மற்றும் சென்னையில் எடுக்கப்பட்டு வந்தது. அந்தப் படப்பிடிப்பு முழுவதும் நடிகர் மோகன்லால் வைத்து எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மங்களூரில் நடந்து வருகிறது.

- Advertisement -

இது நடிகர் சிவராஜ்குமாரை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.கடந்த சில வருடங்களாக வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினுடைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சற்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சற்று பின்தங்கி தான் இருக்கிறது. இதனை முறியடிக்கும் வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் சில மாநிலங்களில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் நெல்சனின் இந்த முயற்சி வெற்றி அடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார். இவருடைய இசைக்கு என்றே பல ரசிகர்கள் இருக்கும் இந்த நிலையில் முன்பு நெல்சன் இயக்கிய டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் திரவிச்சந்திரன் தான் இசையமைத்திருந்தார். அந்தத் திரைப்படங்கள் உடைய பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதனால் இந்த திரைப்படத்திலும் பாடல்கள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular