1980களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. கோலிவுட்டில் ரஜினி, கமல் உட்பட தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றார். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். ஸ்ரீதேவி – போனி கபூரின் வாரிசான ஜான்வி கபூரும் தனது அம்மா வழியில் பாலிவுட்டில் நடிகையாக கலக்கி வருகிறார்.
இந்தியில் 2018ம் ஆண்டு ரிலீஸான தடாக் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜான்வி, அடுத்தடுத்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, மிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜான்வி நடிப்பில் மொத்தமே இதுவரை 6 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகிறார். ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஜான்வி.
கொரட்டலா சிவா இயக்கும் என்டிஆர் நடிக்கும் 30வது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தான் ஜான்வி கபூரின் 26வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஆஃப் சாரியில் மிக வசீகரமாக அமர்ந்துள்ளார் ஜான்வி கபூர்.
இதுகுறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இறுதியாக என்டிஆர்30ல் இணைந்தேன். ஜூனியர் என்டிஆர் உடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதன் கீழே ஜூனியர் என்டிஆர்-ம் ஜான்வி கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். அடிக்கடி இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் தனது கிளாமர் படங்களை ஷேர் செய்து வருகிறார் ஜான்வி கபூர். இதனால், அவருக்கு பல மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 6 படங்களில் நடித்திருந்தாலும், அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் ஜான்வி. அதனால், NTR 30 படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் டோலிவுட் நடிகைகளுக்கே பெரும் அதிர்ச்சியாக உள்ளதாம்.
