Sunday, December 10, 2023
- Advertisement -
HomeEntertainmentவிருது விழாவின் கடைசி நேரத்தில் அறுந்துபோன ஜிப்… சொல்ல முடியாமல் அவதி… சூட்டோடு சூட்டாக ...

விருது விழாவின் கடைசி நேரத்தில் அறுந்துபோன ஜிப்… சொல்ல முடியாமல் அவதி… சூட்டோடு சூட்டாக ஆடை வடிவமைப்பாளர் செய்த உதவி.. இன்ஸ்டாவில் நெகிழ்ந்த ஜான்வி கபூர்!

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்த மகள் தான் ஜான்வி கபூர். சாய்ரட் படத்தின் இந்தி ரீமேக்கான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர். ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கான மிலி, கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

2018ல் சினிமாவில் அறிமுகமான ஜான்வி கபூர் 5 ஆண்டுகளில் ஹீரோயினாக அசுர வளர்ச்சியை கண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு எக்கச்சக்க போட்டோஷூட் புகைப்படஙக்ளை பதிவிட்டு வரும் ஜான்வி கபூருக்கு 21.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

இந்நிலையில் ஃபிலிம்ஃபேர் விருது விழா நிகழ்ச்சிக்காக கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு ரெட்கார்ப்பெட்டிலும் நிகழ்ச்சியில் நடனம் ஆடவும் ரெடியாகிக் கொண்டிருந்த நிலையில், படாரென அவரது ஆடையின் ஜிப் அறுந்து போய் விட்டது.

- Advertisement -

ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொள்ள 5 நிமிடத்திற்கு முன்னாடியும் மேடையில் ஏறி ஆடுவதற்கு முன்னதாக 15 நிமிடங்கள் முன்னாடியும் இப்படி நடந்தால் என்ன ஆகும் என நடிகை ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டாக போட்டு பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

கடைசி நேரத்தில் அறுந்து போன ஜிப்பை உடனடியாக சரி செய்து ஜான்வி கபூரின் ஆடை வடிவமைப்பாளர் காப்பாற்றிய நிலையில், தான் அப்படியொரு கவர்ச்சி ஆட்டத்தை தன்னால் அந்த விருது விழா இரவில் போட முடிந்ததாக அவருக்கு நன்றி தெரிவித்து ஜான்வி கபூர் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

கார்ப்பெட்டில் நடந்து வரும்போதோ அல்லது மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போதோ ஜான்வி கபூரின் ஜிப் அறுந்து விழுந்திருந்தால் அங்கேயே அசிங்கம் ஆகியிருக்குமே என்றும் நல்லவேளையாக அவர் முன்கூட்டியே அதனை பார்த்து மாற்று ஏற்பாடு செய்த நிலையில், தப்பித்து விட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Most Popular