நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியான நிலையில், அதில் பொன்னியின் செல்வராகவே நடித்திருந்தார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் அவரது ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் இந்த ஆண்டிலும் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளன. பொன்னியின் செல்வன் படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படம்தான் இந்த ஆண்டில் அவரது முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது அகிலன் படம் தற்போது ரிலீசில் முந்திக் கொண்டுள்ளது. வரும் மார்ச் 10ம் தேதி அகிலன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தற்போது துவக்கியுள்ளது. படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட ஸ்டில்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் துறைமுகத்தில் வேலை செய்பவராக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
இதையடுத்து படத்தின் சூட்டிங் தூத்துக்குடி மற்றும் சென்னை காசிமேடு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் கதைக்களம் கடலையொட்டி அதிகமாக எடுக்கப்பட்டுள்ளதால், பர்மிஷன் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். தான்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளார். அகிலன் படத்தில் இருந்து துரோகம் எனத் தொடங்கும் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு சிறப்பாக அமைந்த நிலையில், இந்த ஆண்டும் அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன. இதையடுத்து இறைவன், சைரன் ஆகிய படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனிஒருவன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் ஜெயம்ரவியுடன் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த நிலையில், இரண்டாவது பாகத்திலும் அவர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் அவருக்கு முதல் பாகத்தை போலவே சிறப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
