Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாஜியோ சினிமாவின் அதிரடி அறிவிப்பு.. ஒருநாளைக்கு எவ்வளவு தெரியுமா?

ஜியோ சினிமாவின் அதிரடி அறிவிப்பு.. ஒருநாளைக்கு எவ்வளவு தெரியுமா?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஒன்று என்பது போல் தற்போது ஓ டி டி தான் சினிமா ரசிகர்கள் மனதை ஆட்டிப் படைத்து வருகிறது. திரைப்படங்களில் படத்தை காண முடியவில்லை என்றால் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

- Advertisement -

மேலும் ஓடிடியில் கிடைக்கும் வருமானமும் தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதம் போல் அமைந்துவிட்டது. மேலும் ஒரு சில படங்கள் திரையரங்குகளுக்கு வராமலேயே நேராக ஓடிடி வெளியாகிறது. இப்படி பல்வேறு மாற்றங்களை திரைப்பட உலகம் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் ஓடிடி பத்தாது என்று தற்போது ஜியோ சினிமாவும் ஓடிடி உலகை ஆட்டிப்படைக்க வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளது. மேலும் அதனை இலவசமாக பார்க்க ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் ஜியோ சினிமா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி HBO  நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களும் வெப் சீரிஸ் களும் இனி ஜியோ சினிமாவில் இடம் பெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக ஹச் பி ஓ நிறுவனத்திடம் ஜியோ ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதனால் பல ஹாலிவுட் படங்கள் இனி ஜியோ சினிமாவில் நாம் பார்க்கலாம் எனினும் ஜியோ சினிமாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மூன்று மாதங்களுக்கு 99 ரூபாயும் ஒரு ஆண்டுக்கு 299 ரூபாயும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஜியோ சினிமாவின் வருகை மற்ற ஓடிடி தளங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular