Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்தியன் 2 குறித்து முதல் முறையாக பேசிய நடிகர் கமல்..படம் எப்படி வந்திருக்கு!

இந்தியன் 2 குறித்து முதல் முறையாக பேசிய நடிகர் கமல்..படம் எப்படி வந்திருக்கு!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படம் என்ற பெருமையை இந்தியன் பெற்றது. 95 ஆம் ஆண்டு பாட்ஷா படைத்த சாதனையை இந்தியன் அதே ஆண்டு முறியடித்தது.இதற்கு முக்கிய காரணம் நடிகர் கமல்ஹாசனின் மாறுபட்ட வேடமும் கதைக்களமும் தான்.

- Advertisement -

மேலும் இயக்குனர் சங்கர் அபாரமாக இந்தப் படத்தை இயக்கி அப்போதைய தலைமுறை பிரமிக்க வைத்திருந்தார். குறிப்பாக பாடல்கள் எல்லாம் ஏ ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய ஹீட்டைப் பெற்றது. அப்போது கிராபிக்ஸ் காட்சியில் பாடல்கள் மிரள வைக்கும் வகையில் இருந்தது.

- Advertisement -

குறிப்பாக மாயா மச்சீந்திரா பாடல் அப்போது உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை ஆகும். இதே போன்று டெலிபோன் மணி போல் என்ற பாடலும் இன்று வரை ரசிகர்களுக்கு ஃபேவரட் சாங் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படம் குறித்து கமலஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அதில் 25 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிப்பது எப்படி இருக்கிறது? அதே மேக்கப் ஐ 4 மணி நேரம் காத்திருந்து போடும் அனுபவம் குறித்து சொல்லுங்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் இதற்கு தான் சங்கர் இந்தப் படத்தின் கீழேயே ஒரு வரியை போட்டு இருக்கிறார். Older and wiser என்று போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. அதாவது வயதும் ஆகி இருக்கிறது புத்திசாலித்தனமும் கூடியிருக்கிறது என்பது பொருள். இது சேனாபதிக்கு மட்டுமல்ல இந்த படத்தில் பணியாற்றிய எங்கள் அனைவருக்கும் தான்.

அப்போது இருந்த எங்களுக்கும் இப்போது இருந்த எங்களுக்கும் அனுபவம் கூடியிருக்கிறது. நிச்சயம் இந்த தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கும்.முதலாம் பாகம் பார்க்கவில்லை என்றால் கூட இந்த படம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் .இதற்காக நாங்கள் பெரும் அளவில் உழைத்திருக்கிறோம் என்று கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

Most Popular