Entertainment

பிரியங்கா சோப்ரா பாலிவுட்டை விட்டு வெளியேற யார் காரணம் தெரியுமா?… ஒரே ட்விட்டில் பற்ற வைத்த நடிகை கங்கானா ரனாவத்… கொளுந்துவிட்டு எரியும் பாலிவுட்..!

விஜய்யின் தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தி நடிகையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து பாலிவுட்டில் மாஸ் காட்டினார். ஆனால், சமீப காலமாக பாலிவுட் பக்கமே வராமல் ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இந்நிலையில், தான் ஏன் பாலிவுட்டை விட்டு நகர்ந்தேன் என்பதற்கான பதிலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார் பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டில் என் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் என்னை பிடித்து கீழே தள்ளினார்கள். கார்னர் செய்தனர். ஒரு கட்டத்தில் மூச்சே நின்று விடும் போல ஆனது. என்னால் இதற்கு மேல் இந்த கேவலமான அரசியல் விளையாட்டுகளில் எதிர்வினை ஆற்றிக் கொண்டு இங்கே போராட முடியாது என நினைத்தே பாலிவுட்டை விட்டு நகர்ந்து ஹாலிவுட்டுக்கு சென்றேன் என பாலிவுட் சினிமாவையே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு மிகப்பெரிய வெடி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

Advertisement

எந்த ஒரு சர்ச்சை கிடைத்தாலும் அதில் சிக்ஸர் அடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்தை வைத்து நீண்ட காலமாக தனக்கும் பாலிவுட்டுக்கும் இடையே நிலவி வரும் கடும் போருக்கு தீனியாக இந்த விஷயத்தை கையாண்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இது என்ன புது விஷயமா? கரண் ஜோஹர் தான் பாலிவுட்டில் இருந்து பிரியங்கா சோப்ராவையே தடை செய்து விட்டாரே என அதிரடியாக கங்கனா ரனாவத் ட்வீட் போட்டு எரிகிற கொள்ளியில் லிட்டர் கணக்கில் பெட்ரோலையே ஊற்றி இருக்கிறார். ஏற்கனவே சினிமா பிரபலங்களின் வாரிசுகளை அறிமுகம் செய்து வைத்து நெப்போடிசத்தை வளர்த்து வருகிறார் கரண் ஜோஹர் என அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டை விட்டு வெளியேற காரணமே கரண் ஜோஹர் தான் எனக் கூறியுள்ளார்.

Advertisement

பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ரனாவத் இருவருமே கடந்த 2008ம் ஆண்டு வெளியான ஃபேஷன் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட்டில் இருந்து கங்கனா ரனாவத்தையும் கிட்டத்தட்ட வெளியேற்ற கரண் ஜோஹர் முயற்சித்தார் என்றும், அதன் காரணமாகவே நெப்போடிசம் சர்ச்சையை அவர் தொடர்ந்து கிளப்பி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top