Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாகார்த்தியின் ஜப்பான் எப்போது ரிலீஸ் தெரியுமா? இறுதி பணிகள் தீவிரம்

கார்த்தியின் ஜப்பான் எப்போது ரிலீஸ் தெரியுமா? இறுதி பணிகள் தீவிரம்

- Advertisement -

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படத்தை அடுத்து ஜப்பான் என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் நடிகர் கார்த்திக்கு 25வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை குக்கூ, தோழா, மெஹந்தி சர்க்கஸ் ,சிப்ஸ் வருமா போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து சுனில், அனு இம்மானுவேல் ,விஜய் மில்டன் போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. தற்பொழுது தனுஷ் நடித்த வார்த்தை திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த திரைப்படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதேபோல் நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படங்கள் ஆகிய ஆயிரத்தில் ஒருவன் ,சகுனி ,கொம்பன் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படத்தை வருகின்ற மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் படப்பிடிப்பை முடித்திட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள் அதற்காக தீவிரமாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது தற்பொழுது ஜப்பான் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தை வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற பேன் இந்தியன் லாங்குவேஜ் என்று சொல்லப்படும் மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் கார்த்திக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய சினிமா வாழ்வில் ஒரு நல்ல திருப்புமுனை ஏற்பட்டு இருக்கிறது. தற்பொழுது அவர் நடித்த சர்தார் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இந்த திரைப்படத்திலும் நல்ல கதையை தான் தேர்வு செய்திருப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular