Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாகவினின் படத்தில் இணைந்த சசிகுமார் பட நாயகி & அனிருத்.. ! இயக்குனராக மாறிய நடன...

கவினின் படத்தில் இணைந்த சசிகுமார் பட நாயகி & அனிருத்.. ! இயக்குனராக மாறிய நடன மாஸ்டர்.. !

விஜய் தொலைக்காட்சியில் துவங்கி சினிமாவில் நல்ல இடத்தைப் பிடித்தோர்கள் பட்டியல் பெரியது. அதில் ஒருவர் நடிகர் கவின். கணா காணும் காலங்கள் சீரியலில் காலேஜ் மாணவனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து 2015ஆம் ஆண்டு விஜய் தொலைகாட்சி விருதும் வென்றார். சீரியல் தவிர சில விஜய் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார்.

- Advertisement -

இவ்வனைத்திற்கும் பின் பிக் பாஸ் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமாகி அடுத்தடுத்து படங்கள் நடித்துக் கொண்டுள்ளார். பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன் போன்ற படங்களில் சிறிய ரோல்களில் நடித்தப் பின்னரே ஹீரோ வாய்ப்புக் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு நட்புனா என்னனு தெரியுமா திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து 2021ஆம் ஆண்டு கவின் – அமிர்தா ஐயர் ஜோடியாக நடித்த லிஃப்ட் திரைப்படம் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இங்கு துவங்கியது கவினின் நல்ல நேரம். அதே வருடம் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அசிஸ்டன்ட் இயக்குனராகவும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் – அபர்னா தாஸ் நடித்த டாடா படம் மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்று நல்ல வசூலையும் ஈட்டியது. கவினின் முதல் தியேட்டர் ஹிட் இந்தப் படம் தான்.

- Advertisement -

கவினின் அடுத்தப் படம்

நடிகர் கவின் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வழங்கியுள்ளார். கடந்த மாதமே இந்தப் படத்தைப் பற்றிய தகவல்கள் கசிந்திருந்தாலும் இன்று தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடன மாஸ்டர் சதிஷ் படத்தை இயக்குகிறார். கவின் நடிக்கும் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடிக்கிறார். அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அயோத்தி திரைப்படத்தில் பிரீத்தி முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

- Advertisement -

மேலும் கோலிவுட்டை கலக்கி வரும் அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மூன்று படங்களில் 2 ஹிட் மற்றும் அடுத்த படத்திலேயே அனிருத் இசை என நல்ல பாதையில் சென்று கொண்டிருக்கிறார் கவின்.

Most Popular