Entertainment

இன்னும் இரண்டே வாரத்தில் சூர்யா 42 பட டைட்டில் ரிலீஸ்… மே மாசம் டீஸர் வருதாம்… எதிர்பார்ப்புகளை எகிற வைத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் தற்போதைக்கு சூர்யா 42 என்று அழைத்து வருகிறார்கள். அந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள்.

கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யா ஜோடியாக திஷா பதானியும் காமெடி கேரக்டரில் யோகி பாபுவும் நடித்து வருகின்றனர். மற்ற நடிகர்கள் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், சூர்யா 42 டைட்டில் க்ளிம்ப்ஸ் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இருந்து எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் ரசிகர்கள் தொடர்ச்சியாக அப்டேட் கேட்டு வந்தனர்.
படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

அதுகுறித்த அப்டேட்டை வெளியிட வேண்டும் எனவும் சூர்யாவின் ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். தற்போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘படத்தின் டீசர் மே மாதம் வெளியாகும். டைட்டிலும், ரிலீஸ் தேதியும் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்’ என கூறினார். இதனைக் கேட்ட சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சூர்யா 42 திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top