Thursday, September 18, 2025
- Advertisement -
Homeசினிமா'கேஜிஎஃப்' யாஷ்-க்கு அடித்தது லாட்டரி; 400 கோடி ரூபாய் படத்தில் கமிட் ஆகிறார்!

‘கேஜிஎஃப்’ யாஷ்-க்கு அடித்தது லாட்டரி; 400 கோடி ரூபாய் படத்தில் கமிட் ஆகிறார்!

அமிதாபச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா, ஷாருக்கான் ஆகியோர் நடிப்பில் வெளியான “பிரம்மாஸ்திரா” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

- Advertisement -

இதை அடுத்து முதல் நாளில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்திருந்தது. இரண்டு நாட்களில் சுமார் 160 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி 2 படத்திற்கு பிறகு பாலிவுட்டில் வார நாட்களில் வெளியாகி அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையும் “பிரம்மாஸ்திரா” பெற்றுள்ளது.

அயன் முகர்ஜி இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். கரன் சோகரின் “தர்மா புரொடக்ஷன்ஸ்” “ஸ்டார் ஸ்டுடியோஸ்” “பிரைம் புக்கர்ஸ்” ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கியுள்ளனர். திரைக்கதை வலுவாக இல்லை என்றாலும் சிஜி பணிகள் அதிகமாக காணப்படுவது படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்போது “பிரம்மாஸ்திரா 2” படத்தில் “கே ஜி எஃப்” நடிகர் “யாஷ்” நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. “யாஷ்” இந்தப் படத்தில் நடித்தால் தென்னிந்தியாவில் இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்யலாம் என படகுழுவினர் தீர்மானித்துள்ளதாகவும், அவருக்கு கூடுதலாக சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் பாலிவுட்டில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

Most Popular