பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கார்த்திக்கு கடந்த சில ஆண்டுகளில் ரசிகர்கள் கூடினர் இன்னும் கூடிக் கொண்டே இருக்கின்றனர். சில பிரபலமான இயக்குனர்களின் சிறந்த படம் கார்த்தி நடிப்பில் தான் வந்துள்ளது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், எச்.வினோத்தின் தீரன் அதிகாரம் என் ஒன்று, தெலுங்கு இயக்குனர் வம்சிக்கு தோழா மற்றும் சில.
சுருக்கமாக சொல்லப் போனால் கார்த்தி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ஒரு வேளை விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் பார்வையாளர் ஒரு முறையாவது பார்க்கும் அளவிற்கு இருக்கும். உதாரணம் அண்மையில் வெளியான சர்தார். ஸ்கிரிப்டை தேர்ந்தெடுப்பதில் கார்த்தி சிறப்பாக செயல்படுகிறார்.
தற்போது நடிகர் கார்த்தி ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் மோதுகிறது. இப்படத்துக்கு முன் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகிறது. இதில் வந்தியத்தேவனாக குந்தவை மட்டுமல்ல மக்களின் மனதையும் சேர்த்து வென்றார் கார்த்தி.
இந்த இரண்டு படங்களுக்குப் பின் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் ‘ கார்த்தி 26 ’ வருகிறது. நளன் குமாரசுவாமி இயக்கத்தில் முதல் முறையாக கார்த்தி நடிக்கவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக திரிஷா, காயத்ரி பரத்வாஜ் நடிப்பதாக சிலர் கூறி வந்தனர், ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. இளம் அழகியல் கீர்த்தி ஷெட்டி தற்போது இந்தப் படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஷ்யாம் சிங்கா ராய், பங்காராஜு படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார் கீர்த்தி ஷெட்டி. அதோடு வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்திலும் நடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியுடன் ஓர் படத்திலும் நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டியின் கரியர் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இதில் நளனின் படம் மிகப் பெரிய பிளஸ்.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய 2 படங்கள் மூலம் தங்கென்ற ஓர் அங்கீகாரத்தைப் பெற்றவர் இயக்குனர் நளன் குமாரசுவாமி. இந்த 2 படங்கள் தவிர குட்டி ஸ்டோரியில் ஆடல் பாடல் குறும்ப்படதையும் இயக்கியுள்ளார். அவரின் அடுத்தப் படம் எப்போது என்ற ரசிகர்களின் வெயிட்டிங்க்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆவலாகக் காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நளன் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம்.