இந்த வருடம் முழுவதும் லியோவை பற்றிய பேச்சு தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த டிசம்பர் மாதம் பூஜை துவங்கியதிலிருந்து லியோவை பற்றிய பேச்சுக்கள் அதிகமாகியுள்ளன. மேலும் படக்குழுவும் அவ்வப்போது புகைப்படங்களையோ, அறிவிப்புகளையோ வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றது.
பர்த்டே பார்ட்டி, படப்பிடிப்பு தளத்தில் கேஷுவலாக எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் முதலிடத்திலேயே இருந்து வருகின்றது லியோ. மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களுக்கு இல்லாத வகையில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதை சரிவர பயன்படுத்தி லியோ படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் உழைத்து வருகின்றார் லோகேஷ்.
ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியிலும் நடைபெற உள்ளது. லியோ திரைப்படமும் LCU வில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கின்றது.
ஆனால் இதற்கு விஜய் சம்மதிப்பாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. காரணம் LCU என்றால் அதில் கார்த்தி, சூர்யா, கமல் என அனைவரும் வரவேண்டும். பொதுவாக விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் மற்ற ஹீரோக்களின் ஆதிக்கம் இருப்பதற்கு சம்மதிப்பார்களா என்ற கேள்வி இருந்து வருகின்றது.
இதனை உணர்ந்த லோகேஷ் செம பிளான் ஒன்றை நிகழ்த்தி லியோ படத்தை LCU வில் இணைத்துள்ளாராம். அதாவது கைதி படத்தின் தொடர்ச்சி தான் விக்ரம் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். ஆனால் கைதி கதைக்கு முன் என்ன நடந்தது என்பது தான் லியோ படத்தின் கதையாம்.
எனவே LCU வின் அடித்தளமாக லியோ படம் இருக்குமாம். எனவே இப்படம் விஜய்யை சுற்றி தான் இருக்கும் என்றும், கைதி 2, விக்ரம் 2 போன்ற படங்களிலும் விஜய்யின் கதாபாத்திரம் ஆதிக்கம் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் லியோ படத்தின் கிளைமாக்ஸ் செம மாஸாக இருக்கும் என்ற தகவல் வந்துள்ளது. அதாவது கைதி கதைக்கு லீடாக லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் லியோ கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் கதாபாத்திரமும் இடம்பெறும் வாய்ப்பும் இருக்கின்றதாம்.இதனைக்கேள்வி பட்ட ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
