இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்திற்கான படபிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட படக்குழுவினர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தற்பொழுது காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் காஷ்மீருக்கு வந்திருக்கிறார். காஷ்மீருக்கு வந்த சஞ்சய் தத்தை தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் அவரை வரவேற்கும் காட்சியை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்தக் காட்சியில் தளபதி விஜய் வியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தை காட்சியில் காண முடிகிறது. அந்த தோற்றம் இதுவரை தளபதி விஜய் நடிக்காத புதுமையான தோற்றமாக உள்ளது.
இதைப் பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படத்தின் தளபதி விஜய் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற ஆர்வம் பெருமளவில் ஏற்படுகிறது. வருகின்ற மார்ச் 29ஆம் தேதி வரை காஷ்மீரில் லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இருக்கிறது என்பதால் இதற்குப் பிறகு வரக்கூடிய காட்சிகள் எல்லாம் சஞ்சய் தத் நடிக்கப் போகிறார் என்பது தெரிய வருகிறது.
இந்தத் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ,ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியிடப்படுவதால் கே ஜி எஃப் பாகுபலி போன்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதிரியான கதைக்களமாக இருந்தாலும் அதை கொண்டாட தளபதி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடுத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பதால் இந்த திரைப்படத்தின் பாடல்களின் நிச்சயம் வெற்றி அடையும். இதற்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அனிருத் அமைத்த அரபிக் குத்து என்ற பாடல் இன்று வரையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் இந்த திரைப்படத்திலும் நீங்கள் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
