நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்திருந்தார்கள்.
இந்த நிலையில் இந்த ட்ரெய்லர் நேத்து ஆறு முப்பது மணிக்கு வெளியான நிலையில் மதியம் 12 மணிக்குள் இந்த ட்ரைலரை சுமார் மூன்று கோடி பார்வையாளர்கள் தமிழில் மட்டும் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.
இதே போல் ஹிந்தி ட்ரெய்லரை 20 லட்சம் பார்வையாளர்கள் இரண்டு மணி நேரத்தில் பார்த்திருக்கிறார்கள். ஒரு டப்பிங் படத்திற்கு இந்த அளவுக்கு பார்வையாளர்கள் youtube-யில் கிடைத்தது இதுதான் முதல் முறையாகும்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை துபாயில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடந்த பட குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. துபாயில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இந்த விழாவில் நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் அவர் வருவாரா இல்லையா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேபோன்று அடுத்த ஒரு வாரத்திற்கு தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொள்ள பட குழு முடிவு எடுத்திருக்கிறது. மும்பை, டெல்லி, ஹைதராபாத்,பெங்களூர், கொச்சி, மலேசியா ஆகிய இடங்களுக்கு படக்குழு செல்ல திட்டமிட்டு இருக்கிறது.
இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பல்வேறு youtube சேனல்களுக்கு பேட்டிகளை கொடுக்க இருக்கிறார். இதன் மூலம் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை பேன் இந்திய அளவில் மேற்கொள்ள தயாரிப்பாளர் லலித் குமார் முடிவெடுத்து இருக்கிறார்.