Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா vs கார்த்தி - நிறைவேறாமல் போன லோகேஷ் கனகராஜ் கனவு

சூர்யா vs கார்த்தி – நிறைவேறாமல் போன லோகேஷ் கனகராஜ் கனவு

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கனவு நிறைவேறாமல் போய்விட்டது தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனர் என்ற பெயரை தற்போது லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். மாநகரம், கைதி,மாஸ்டர், விக்ரம் என 4 படங்கள் மூலம் தற்போது தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அதிலும் இவர் எடுத்துள்ள இரண்டு படங்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. கைதி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை முடித்துவிட்டு கொரோனா காலத்தில் அமைதியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அமேசானில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் கண்டுள்ளார். ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் லோகேஷ் கனகராஜுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து வெளியிட வேண்டும் என்று ஆசையில் லோகேஷ் கனகராஜ் இருந்திருக்கிறார். ஐயப்பன் கோஷியும் திரைப்படம் இரண்டு ஹீரோக்கள் மோதிக் கொள்வது போல் அமைக்கப்பட்டுள்ள கமர்சியல் சரவெடி திரைப்படம். இதனால் இந்த படத்தில் சூர்யாவையும் கார்த்தியையும் நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்த லோகேஷ் கனகராஜ் அதன் உரிமையை வாங்குவதற்கு ஒரு தயாரிப்பாளரை அணுகியுள்ளார். அப்போதுதான் லோகேஷ் கனகராஜுக்கு அந்த அதிர்ச்சிகரமான செய்தி வந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்திற்கான உரிமையை ஏற்கனவே ஒரு தயாரிப்பாளர் வாங்கி விட்டதாகவும், அதில் அவர் வேறு நடிகர்களையும் இயக்குனர்களையும் வைத்து படத்தை எடுக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் இடம் கூறியுள்ளனர். இதனால் ஐயப்பன் கோஷியும் படத்தை தமிழில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தை பல்வேறு மொழிகளில் பல்வேறு தயாரிப்பாளர்கள் அதன் உரிமையை வாங்கி வைத்துள்ளனர். தெலுங்கில் அந்த திரைப்படம் ஏற்கனவே எடுக்கப்பட்டு பீம்லா நாயக் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்து அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.இந்த படம் தற்போது ஹிந்திலும் ரீமேக் ஆக உள்ளது. ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சாட்சி கடந்த ஆண்டு காலமானது குறிப்பிடத்தக்கது.

Most Popular