Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமா“ லோகேஷ் கூட படம் பண்ண பிறகு ரஜினி சார் ஓய்வு பெறப் போகிறார்... ”...

“ லோகேஷ் கூட படம் பண்ண பிறகு ரஜினி சார் ஓய்வு பெறப் போகிறார்… ” – ரகசியத்தை உடைத்த மிஷ்கின்.. !

தமிழில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே சூப்பர்ஸ்டார் என்றால் அனைவரது நினைவிற்கு வருபவர் ரஜினிகாந்த் தான். தனது நடிப்பை விட ஸ்டைலுக்கு பெயர் போனவர். நடிப்பில் இது அவரது 48வது ஆண்டு ஆகும். 72 வயதாகும் ரஜினி தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக இன்றளவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

- Advertisement -

கடைசி 2 – 3 ஆண்டுகளில் ஷூட்டிங்கின் போது சில முறை உடல்நலக் குறைவு ரஜினிக்கு ஏற்ப்பட்டது. ஆனாலும் ஓய்வு பெறாமல் நடித்து கொண்டிருக்கிறார். இன்று நேர்க்காணல் ஒன்றில் மிஷ்கின் நம் சூப்பர்ஸ்டார் விரைவில் ஓய்வு பேரப் போவதாக இருக்கிறார் என்ற பெரிய ஷாக்கை கொடுத்துள்ளார். லியோ படத்தில் நடித்துள்ளார் அவர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரிந்ததைப் பற்றியும் அவரது திறமையைப் பற்றியும் புகழ்ந்து பேசினார்.

இடையில் லோகேஷ் – ரஜினி பிராஜெக்ட் பற்றியும் விவரித்தார். “ அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினி சாருக்காக படம் பண்றான். இதெல்லாம் ரொம்ப பெருமையான தருணம். ரஜினி சாரின் கடைசி படம் என்றும் சொல்கின்றனர் ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சினிமாவில் பெரிய இடத்தில் இருந்த ஒருவர் அவரே லோகேஷை அழைத்து எனக்காக படம் பண்ணு எனக் கேட்பது பெருமையான தருணம். ” எனக் கூறியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

- Advertisement -

கடந்த மாதம் ரஜினிகாந்தை திடீரென சந்தித்தார் லோகேஷ் கனகராஜ். பலர் இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்யப் போவதாகவும் கூறினர். ஆனால் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. அதே சமயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பல இயக்குநர்களிடம் ஸ்கிரிப்ட் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இயக்குனர் லோகேஷின் நண்பர் மற்றும் அவருடன் சேர்ந்து பணிபுரிந்த மிஷ்கினுக்கு நிச்சயம் சரியான செய்தி தெரிந்து இருக்கும். ரஜினியின் கடைசி படம் என அவர் கூறியது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் ரஜினி – லோகேஷ் படம் நடக்கபோவது ஏறத் தாழ உறுதியாகியுள்ளது.

தலைவர் ரஜினிகாந்தின் 171வது படமாக இது அமையும். தற்போது நெல்சனுடன் ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டுள்ளார். அதன் பின் தன் மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தலைவர் 170 படத்தை டி.ஜே.ஞாவேல் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular