ஏகே 62 அப்டேட் எப்போது வெளியாகும் என்பது குறித்து லைகா தமிழ்க்குமரன் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க அஜித் கமிட் ஆகியுள்ளார். அதில் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அவர் அந்த ப்ராஜக்ட்டில் இருந்து விலகியிருக்கிறார்.
அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், அஜித்தின் தந்தை சுப்ரமணியன் காலமானார். இதுவரை ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
விக்னேஷ் சிவனின் திரைக்கதையில் திருப்தி இல்லாமல் தான் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதனால் அதன்பின்னர் தான் மகிழ் திருமேனியும் இந்த ப்ராஜக்ட் உள்ளே வந்துள்ளார். முதலில் ஒன்லைன் கேட்ட அஜித் உடனே சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் மொத்த ஸ்கிரிப்ட்டும் ரெடியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் எனக்கூறி விட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ்குமரன் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி ஆகியோர் அஜித்தை சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது ஏகே 62 படத்தின் அப்டேட்டையும் தெரிவித்தனர்.
ஏகே 62 படத்தின் நல்ல செய்தி அடுத்த மாதம் வரும் என்று தமிழ் குமரன் தெரிவித்திருக்கிறார். படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அடுத்த மாதம் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
