Entertainment

நயன்தாராவால் வாய்ப்பு பறிபோனது.. ரஜினியுடன் நடித்த காட்சிகள் வெளியாகவில்லை… வேதனையில் விஷால் பட நடிகை!

நடிகை மம்தா மோகன்தாஸ் விஷாலுடன் சிவப்பதிகாரம் என்ற படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழில் குரு என் ஆளு, தடையறத் தாக்க, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மம்தா மோகன்தாஸ், சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு மலையாளத்திலேயே கூடுதல் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தபோது புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளானார் மம்தா மோகன்தாஸ். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்டார். தன்னுடைய நண்பர்களிடம் இந்த விஷயத்தை கூறியபோது அவர்கள் கொடுத்த நம்பிக்கை தனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாகவும் ஆனால் இருட்டு அறையில் அமர்ந்து இதுகுறித்து யோசித்து பலமுறை அழுதிருப்பதாகவும் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisement

தற்போது மலையாளப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் மம்தா மோகன்தாஸ். கடந்த சில தினங்களுக்கு முன்பு அருந்ததி படத்தில் இவருக்கு கிடைக்க இருந்த சான்ஸ்தான், நடிகை அனுஷ்காவிற்கு சென்றது. அந்தப் படம் அனுஷ்காவின் கேரியரில் மிகப்பெரிய ப்ளசாக அமைந்தது. இதனிடையே, தெலுங்கு ரசிகர்களுக்கு தான் புதிது என்பதால்தான் அந்த படவாய்ப்பை தான் ஏற்கவில்லை என்றும் அது தனக்கு மிகப்பெரிய மிஸ்ஸாக அமைந்ததாகவும் மம்தா மோகன்தாஸ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழில் குசேலன் படத்தில் நடிகராக நடித்திருந்த ரஜினிக்கு ஜோடியாக, அவருடன் சில காட்சிகளிலும் ஒரு டூயட் பாடலிலும் தான் நடித்திருந்ததாகவும் ஆனால் தன்னுடைய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் மம்தா மோகன்தாஸ் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் அந்தப் படத்தில் ரஜினியின் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடித்திருந்ததால், மேலும் ஒரு நாயகி எதற்கு என்று அவர் கூறிவிட்டதால், தன்னுடைய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக மம்தா மோகன்தாஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

ரஜினி, பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான குசேலன் படத்தில் பசுபதியின் நண்பராக, ஹீரோவாக ரஜினி நடித்திருந்தார். இந்தப்படத்தில்தான் ரஜினியின் நாயகியாக மம்தா மோகன்தாஸ் சில தினங்கள் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதை அறிந்தபோது,தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தற்போது மம்தா மோகன்தாஸ் பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழில் சிவப்பதிகாரம், தடையறத்தாக்க, எனிமி என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கான ரசிகர்கள் பேஸை வைத்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். மலையாளத்திலும் சிறப்பான பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள மம்தா, தன்னுடைய புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் மலையாளத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top