எதையுமே வித்தியாசமாக செய்யும் மன்சூர் அலி கான் தனது பிறந்தநாளை முன்னிட்டு பலாப்பழத்தை வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சிகள் தீயாக பரவி வருகிறது. கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக மிரட்டிய மன்சூர் அலி கான், நடிகர் விஜய்யின் மின்சாரக் கண்ணா படத்தில் காமெடி வில்லனாக நடித்து இருப்பார். மிரட்டல் வில்லனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மன்சூர் அலி கான். ஆனந்த் ராஜ் சமீப காலமாக காமெடியனாக மாறி உள்ள நிலையில், மன்சூர் அலி கானும் பல படங்களில் காமெடி கலந்த வில்லனாகவும் காமெடியனாகவும் கலக்கி வருகிறார். விஜய், குஷ்பு, ரம்பா நடித்த மின்சாரக் கண்ணா படத்தில் காமெடி வில்லனாக நடித்திருப்பார் மன்சூர் அலி கான்.
அந்த படத்தில் மன்சூர் பேசும் வசனம் இப்போதும் டெம்பிளேட் மீமாக வலம் வருகிறது. இந்நிலையில், லேட்டஸ்ட்டாக விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மன்சூர் அலி கானுக்கு கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்திலேயே மன்சூர் அலி கான் தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது. ஆனால், அப்போதைக்கு மன்சூர் அலி கான் தயக்கம் காட்டிய நிலையில், கார்த்தி நடித்தார். தற்போது லியோ படத்தில் நடித்து வரும் மன்சூர் அலி கான் கோட் சூட் அணிந்து லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் மன்சூர் அலி கான் எதை செய்தாலும் புதுமையாக செய்ய வேண்டும் என நினைப்பவர். முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. சரக்கு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பலாப்பழத்தை வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் மன்சூர். லியோ படத்தின் ஆன்போர்ட் அறிவிப்பிலேயே மன்சூர் அலி கான் பேசியது மட்டுமே தமிழில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பலாப்பழம் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ள மன்சூர் அலி கானுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
