கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பாதியிலேயே தத்தளிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். விக்ரம், ரித்து வர்மா, ஐஷ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் ஆகிய முன்னனி நடிகர்கள் கொண்ட இந்த திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வந்து ஏறத்ததாழ 9 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் வரவில்லை.
இணையத்தில் நெட்டிசன்கள் “ பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் போது ரீலீஸ் ஆகும் என்றனர். நான் பள்ளி & கல்லூரி முடித்துவிட்டு வேலை இல்லாமல் வெட்டியாக இருந்து தற்போது பணிக்குக்கே சென்றுவிட்டேன். இன்னும் வெளியாகவில்லை இந்தப் படம். ” என கலாய்த்து தல்லுகின்றனர். இதுவரை படத்தின் டிரெய்லர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ ஒரு மனம் ’ என்ற பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது.
சென்ற ஆண்டு மத்தியில் கூட டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றனர் ஆனால் எதுவும் பலிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் கௌதம் வாசுதேவ் மேனனின் பொருளாதார சிக்கல் தான். துருவ நட்சத்திரத்துடன் இவருடைய ‘ என்னை நோக்கிப் பாயும் தோட்டா ’ படமும் இதே ரீலீஸ் பிரச்சினையை தான் சந்தித்தது. வேல்ஸ் நிறுவனத்தின் உதவியால் அப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகிவிட்டது. விக்ரமின் இந்தப் படம் தான் பல ஆண்டுகள் வெயிட்டிங்.
அண்மையில் பல சினிமா விமர்சகர்கள் விரைவில் துருவ நட்சத்திரத்தை நான் திரையரங்கில் காணப் போகிறோம் என் அவர்கது சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இம்முறை அது நிஜமாக காத்திருக்கிறது. படத்தின் இறுதிகட்ட பணிகளில் கௌதம் மேனன் & கோ பிஸியாக பணியாற்றி வருகிறது. மறுபக்கம் படத்தின் முக்கிய டெக்னீசியனான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளார்.
தன் சமூக வலைதள பக்கத்தில், “ இயக்குனர் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசைக்காக டால்பி 9.1.4ல் பணியாற்றி வருகிறேன். விரைவில் உங்களை திரையரங்கில் கான்கிறேன். ” எனப் பதிவிட்டிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜின் இந்த பதிவு ரீலீஸ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையை சற்று ஊட்டியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் என்றாலே குவாலிட்டி தான். இம்முறை டால்பி 9.1.4 என்பதால் பி.ஜி.எம்லாம் திரையரங்கில் தெறிக்கும்.