Entertainment

நானியின் ”தசரா” டிரெய்லர்…அசுரத்தனமா இருக்கு சாரே.. பந்தயம் கட்டலாம் போல.. ஸ்கிரீன்ல மேஜிக் காட்டப் போகுது பாருங்க..!

நடிகர் நானி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பான் இந்தியா ஸ்டாராகவும் விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றன. இதில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது.

இந்த படத்தைத் தொடர்ந்து ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாகி உள்ள படம் தசரா. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

தசரா படத்தின் தமிழ் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இதில், நானி முரட்டுத்தனமான லுக்குடன், தாடி, மீசை வைத்து அலறவிட்டார். மேலும், டீசரின் ஆரம்பத்திலேயே, சரக்கு குடித்தபடி வரும் நானி, சரக்குக்கு நாங்க அடிமை இல்லை… ஊறிப்போன சம்பிரதாயம் என்று மாஸான வசனத்துடன் ஆட்டம் போட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

Advertisement

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. அதைப்போல நானியின் அசுரத்தனமான நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. டிரைலரை பார்த்த பலரும் படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஆகும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top