Entertainment

பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி போட்டு அமர்ந்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் படத்தில் உறுதியான ஜோடி.. ரசிகர்கள் உற்சாகம்!

பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழா நேற்று இரவு பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை ராஷி கன்னா, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நடிகர் கவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் விருது விழா நிகழ்ச்சிகளுக்கும் அதிகமாக தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை நயன்தாரா நேற்று நடந்த பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். நயன்தாரா வந்ததுமே அரங்கமே தலைவி என ஆர்பரித்து அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தது.

Advertisement

வெள்ளை நிற சேலை அணிந்து அழகாக நடிகை நயன்தாரா விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக திகழ்கிறார் நயன்தாரா என்கிற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

நயன்தாராவுடன் பிக் பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்ஃபி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளார். இந்த நிலையில் லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்த பிரதீப் ரங்கநாதனும் நேற்று நடந்த விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகை நயன்தாரா விழா மேடைக்கு வந்த உடனே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அருகில் அமர்ந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

Advertisement

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய தின நிகழ்ச்சியில் இருவரும் பக்கத்தில் ஜோடி போட்டு அமர்ந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் கூடிய சீக்கிரமே இருவரும் இணைந்து நடிக்கப் போவது கன்ஃபார்ம் தான் போல என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top