ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் பிகினியில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா ஐயா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா.
இதற்கிடையே காதலால் பிரச்னைகளை சந்தித்த நயன், நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் தீவிரமாக பல வருடங்கள் காதலித்தனர். ஒருவழியாக கடந்த வருடம் ஜூன் மாதம் இருவரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னுடைய கேரியர் பாதிக்காத வண்ணம் பார்த்து வருகிறார் நயன்தாரா.
இந்த ஜோடி வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக மாறியது. இந்த விஷயம் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னதாகவே தாங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொண்டதாக விளக்கம் அளித்த நிலையில், அந்த விஷயமும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. தற்போது ஷாருக்கானின் ஜவான், ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
மேலும், நயன்தாராவின் போர்ஷன் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜவான் படத்தில் நயன்தாரா பிகினியில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2007ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா படத்தில் நயன்தாரா பிகினி உடையில் தோன்றியிருந்தார். அப்போது அது மிகப்பெரிய பேசுபொருளானது. தற்போது திருமணம் ஆகியிருக்கும் சூழலில் நயன்தாரா பிகினியில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.