சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இருவரும் முதன்முறையாக இணைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி
இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடரும் என சொல்லப்படுகிறது. இதனிடையே SK 22 படம் குறித்தும் அடுத்தடுத்து அப்டேட்ஸ் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி, இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
உறுதிசெய்த சிவகார்த்திகேயன்
ஏஆர் முருகதாஸ் தயாரித்த 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனும் அவர்களது கூட்டணி பற்றி பேசியிருந்தார். அதனால், சிவகார்த்திகேயன் – ஏஆர் முருகதாஸ் கூட்டணி கண்டிப்பாக இணையும் என தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி நாயகிகளிடையே கடும் போட்டி காணப்படுகிறதாம். அதில் ஒருவர் சீதா ராமம் நாயகி மிருணாள் தாகூர் என சொல்லப்படுகிறது.


சீதா ராமம் நாயகி
துல்கர் சல்மானின் சீதா ராமம் படத்தில் இளவரசியாக நடித்து ரசிகர்களை வசீகரித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியில் அக்ஷய்குமாருடன் செம்ம கிளாமராக ஆட்டம் போட்டு அசத்தியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் இன்ஸ்டாவிலும் அடிக்கடி பிகினி போட்டோஸ் போட்டு கலங்கடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளாராம் மிருணாள் தாகூர்.
ராசியில்லாத நடிகை பூஜா ஹெக்டே
அதேநேரம் SK 22 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். ஆனால், சமீபத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்த பிரபாஸின் ராதே ஷ்யாம், விஜய்யின் பீஸ்ட், ராம் சரணின் ஆச்சார்யா, சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜான் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின.


பூஜா ஹெக்டே அல்லது மிருணாள் தாகூர்
இதனால் பூஜா ஹெக்டே மீது ராசியில்லாத நடிகை என்ற முத்திரை விழுந்துள்ளது. எனவே SK 22 படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பது சந்தேகம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் மிருணாள் தாகூர் அல்லது பூஜா ஹெக்டே இருவரில் ஒருவரை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் சிவகார்த்திகேயனும் ஏஆர் முருகதாஸும் உறுதியாக இருக்கிறார்களாம்.