இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த பெரிய நடிகர்களின் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் இருக்கிறது. அப்படி வெளிவந்த ஒரு சில திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணத்தினால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் செல்வது குறைந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,விஜய் ,அஜித், சூர்யா ,சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு என்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எல்லாம் வருடத்திற்கு ஒன்றாவது திரையரங்கில் வெளியிடப்பட வேண்டும் என்று ரசிகர்கள் பெரும் ஆர்வம் கொள்வது வழக்கம் .அந்த வகையில் கொரோனாவிற்கு பிறகு திரைப்படங்கள் திறக்கப்பட்டதும் வரிசையாக நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில் பஞ்சம் வெளியிடப்பட்டது.
ஆனால் சகஜ நிலை அடைந்த தற்பொழுது ஏன் தமிழ் சினிமா மிகவும் சோர்வடைந்து விட்டது என்று ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். பிற மொழிகளில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் தமிழ் சினிமா போல் வராது என்று கருத்துடைய பல ரசிகர்கள் நல்ல திரைப்படங்களைக் கேட்டு கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க திரையரங்கை போல் ott டீகளிலும் நல்ல வரவேற்பு இருப்பது தற்பொழுது சகஜம் ஆகிவிட்டது. திரையரங்கில் ஒரு திரைப்படம் எந்த அளவிற்கு வசூலை பெறுகிறதோ அதை பொறுத்து போட்டிகளில் அதனுடைய மதிப்பும் அதிகம் ஆகிறது. ஆனால் தற்பொழுது அப்படி வாங்குவதற்கு கூட எந்த திரைப்படமும் பெருமளவில் இல்லை என்பதே விதியாகிவிட்டது.
இந்நிலையில் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் வருகின்ற வாரம் ஓடி டியில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் அவர் மனைவி நடிகை கீர்த்தி பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது .ஆனால் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட பிறகு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவிட்டாலும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்திற்கு போட்டியாக ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் அதே சமயத்தில் வெளிவந்தது .ஆனால் கடந்த வாரம் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கடந்த வாரம் ஓ டி டி யில் வெளியிடப்பட்டது. அதேபோல் தற்பொழுது ப்ளூ ஸ்டார் திரைப்படத்துடன் பிறமொழி திரைப்படங்கள் வெப் சீரிஸ் என்று 9 திரைப்படங்கள் ஓடிடியில் வருகின்ற வாரம் வெளியிடப்பட இருக்கிறது .
மேலும் இதில் ஏழு வகையான பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட புவர் திங்க் என்று சொல்லப்படும் ஹாலிவுட் திரைப்படமும் வெளியிடப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் ப்ளூ ஸ்டார் திரைப்படம் 9 விதமான திரைப்படங்களுடன் மோதி வெற்றி பெறுமா என்ற கேள்விக்குறி தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.