Tuesday, April 16, 2024
- Advertisement -
Homeசினிமாதனுஷ்க்கு போட்டியாக சிம்பு எடுத்த முடிவு.. எந்த தேதி தெரியுமா?

தனுஷ்க்கு போட்டியாக சிம்பு எடுத்த முடிவு.. எந்த தேதி தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் கிருஷ்ணனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் பத்து தல திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த திரைப்படத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது. சிம்புவின் பிறந்தநாளன்று பத்து தல திரைப்படத்தினுடைய முதல் பாடல் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்திலிருந்து எஸ் டி ஆர் தற்பொழுது ஏ ஜி ஆர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார்.
நம்ம சத்தம் என்ற பாடல் புயல் ஏ ஆர் ரகுமானால் இசையமைக்கப்பட்டு அவருடைய குரலிலேயே வெளியாக இருக்கிறது என்பதால் இந்த பாடலுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. அந்தப் பாடலுக்கு நடிகர் சிம்பு தீ பொறிகளுக்கு நடுவில் ஆடிய நடனமும் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர்   போன்ற பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள்.வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி பத்து தல திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது என்ற தகவல் தற்பொழுது வெளியாக இருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 30ஆம் தேதி பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பொருத்தவரை அது வெறும் நடிகர் சிம்பு உடைய ரசிகர்களுக்கு மட்டும் கொண்டாட்டத்தை அளிக்கக் கூடியது அல்ல. அது இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் உடைய ரசிகர்களின் கொண்டாட்டமும் ஆகும். அதனால் இந்த இசை வெளியீட்டு விழா இரட்டிப்பு சந்தோஷத்தை ரசிகர்களுக்கு தர காத்திருக்கிறது .
இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இன்னும் பல ஆஸ்கார்களை பெறுவதற்கு தகுதியானவர் என்பதை அவர் ஒவ்வொரு இசையிலும் நிரூபித்துக் கொண்டு வருகிறார். அதேபோல பத்து தல திரைப்படத்தின் உடைய பாடல்களும் மாபெரும் வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நேற்று வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது ரசிகர்களை கூட்டி மாஸ் காட்டிய நிலையில் தற்போது சிம்பு ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த இருக்கிறார்.

Most Popular