Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாபத்து தல ஒடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு

பத்து தல ஒடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு

நடிகர் சிம்பு ஒபேலி கிருஷ்ணா இணைந்து பணியாற்றிய பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி தமிழக முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படம் முதல் நாளில் மட்டும் 13 கோடி ரூபாய் வசூலை படைத்தது. நடிகர் சிம்புவுக்கு மாநாடு, வெந்துத் துணிந்தது காடு ஆகிய திரைப்படத்திற்கு பிறகு பத்து தல திரைப்படமும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்தது.

- Advertisement -

தமிழகத்தில் மட்டும் சுமார் 26 கோடி ரூபாய் வசூலை பத்து தல திரைப்படம் பெற்றது. எனினும் இது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை விட ஆறு கோடி ரூபாய் குறைவாகும். காரணம் விடுதலை திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பையும் விமர்சனத்தையும் பெற்றதால் அது பத்து தல திரைப்படத்தின் வசூலை பாதித்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்னும் தமிழகத்தில் சில திரையரங்குகளில் பத்து தல திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தின் ஓ டி டி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ விரைவில் பத்து தல திரைப்படம் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனால் தேர்வு காலம் ,ரமலான் நோன்பு  பெருநாள் ஆகிய காரணங்களால் பல்வேறு ரசிகர்கள் திரையரங்குகளில் பத்துதல திரைப்படத்தை பார்க்க முடியாமல் போய் இருக்கலாம். இதனால் தற்போது ஓ டி டி ரிலீஸ் ஆக உள்ளது. பத்து தல திரைப்படத்தை ஏற்கனவே சில சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இது அமேசான் நிறுவனத்திற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஹெச்டி தரத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானால் மக்கள் எப்படி ஓடிடியில் பணம் கட்டி பார்ப்பார்கள்

இது ஓடிடிக்கு அழிவையும் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். தற்போது  நடிகர் சிம்பு தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Popular