வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனான நடித்த விடுதலை திரைப்படம் இன்று வெளியான நிலையில், படத்திற்கு முதல்நாளே ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். சூரி, விஜய் சேதுபதியை தாண்டி, இது வெற்றிமாறன் படம் என்ற எதிர்பார்ப்பை அதிகம் உருவாக்கியிருந்தது. படத்தில் வெற்றிமாறன் அப்படி என்ன செய்திருக்கிறார்? என்று தெரிந்துகொள்ளவே பலரும் தியேட்டர்களுக்கு படையெடுக்கின்றனர்.
விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பது ஒரு பிளஸ் பாயிண்ட். விடுதலை படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் விநியோகம் செய்திருக்கிறது.
விடுதலை படம் நிச்சயம் வசூலில் புதிய சாதனை படைக்கத்தான் போகிறது என ரசிகர்கள் உற்சாகமாக தெரிவிக்கின்றனர். விடுதலை படத்தை பார்த்த நெட்டிசன்கள் பல கருத்துகளை அள்ளி தெளித்து வருகின்றனர். அருமையான திரைக்கதை. வெற்றிமாறன் மீண்டும் ஜெயித்துவிட்டார். சூரி அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். பவானிஸ்ரீயின் நடிப்பு அருமை என புகழ்ந்து தள்ளுகிறார்.
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சொல்ல வந்ததை பொட்டில் அடித்தது போன்று சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். மனிதர் வேற லெவல். இளையராஜாவின் இசை சிறப்பு. சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டோம். காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக மாறியிருக்கிறார். அந்த மாற்றம் பயங்கரமாக இருக்கிறது என்று மக்கள் சொல்லுகிறார்கள்.
அதேபோல் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் சில காட்சிகளே வந்தாலும் விஜய் சேதுபதி எளிதாக முத்திரை பதித்துவிடுகிறார். சூரி காமெடியனாக அல்லாமல் முழுக்க முழுக்க போலீஸ்காரராக மாறி இருக்கிறார். விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம் வெற்றிமாறன். லேட் பண்ணாம சீக்கிரமாக அதையும் ரிலீஸ் செய்துவிடுங்கள் என தெரிவிக்கின்றனர்.
ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் விடுதலை. இரண்டாம் பாகத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப் போகிறார் வெற்றிமாறன். விடுதலை படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மருமகள் பவானிஸ்ரீ தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
