Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழா எப்போது? லைகா செய்த பிரம்மாண்ட ஏற்பாடு

பொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழா எப்போது? லைகா செய்த பிரம்மாண்ட ஏற்பாடு

- Advertisement -

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி கார்த்தி விக்ரம், ஜெயராம், பார்த்திபன் ,சரத்குமார் ,பிரகாஷ்ராஜ் நடிகை திரிஷா ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இயக்குனர் மணிரத்தினம் கண்ட பல நாள் கனவு கடந்த ஆண்டு 30 செப்டம்பர் 2022 ல் உருப்பெற்றது. நடித்த ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரத்திற்கு படைக்கப்பட்டவர்கள் போன்ற பிம்பத்தை திரையில் காட்டினார்கள்.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் உடைய இசை கூடுதல் அழகினை சேர்த்தது. இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தினுடைய இரண்டாவது பாகம் வெளியிடப்பட இருக்கிறது.

- Advertisement -

இது திரைப்படத்தின் உடைய முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இந்த பாடல் வானதி மற்றும் அருண்மொழிவர்மனின் காதல் பாடல் ஆகும் என்ற தகவலும் வெளிவந்தது . இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தின் உடைய இசை வெளியிட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் படக்குழுவினர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வருகின்ற மார்ச் மாதம் முடிவில் இந்த திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா மற்றும் இந்த திரைப்படத்தின் உடைய ட்ரெய்லரும் வெளியிடப்பட இருக்கிறது என்ற தகவல் தற்பொழுது வெளிவந்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு ப்ரமோஷன் அமைக்கும் பணிக்காக பணத்தின் நடித்த அனைத்து நட்சத்திரங்களின் கால் சீட்டுகளும் மார்ச் மாதம் முழுவதும் தயாரிப்பாளர் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அருண்மொழிவர்மன் என்ன ஆனார் என்ற கேள்விக்குறிகளோடு நிறைவடைந்தது பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம்.
மேலும் நந்தினியின் சூழ்ச்சி என்ன அதற்கு ஆதித்யவர்மனின் பதிலடி என்ன என்ற பல கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உடைய பாகம் இரண்டு திரைப்படம் அமைந்திருக்கும் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் போனேன் செல்வம் திரைப்படத்தின் உடைய இரண்டாம் பாகத்தை பார்க்க காத்திருக்கிறார்கள்.

Most Popular