Entertainment

ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார்? நேருக்கு நேராக பழிவாங்கினாளா நந்தினி? வெளியானது பொன்னியின் செல்வன் – 2 ட்ரெய்லர்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபு, ஜெயராம், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

இந்தப் படத்தின் ட்ரெய்லர் முதல் பாகத்தின் முடிவில் இருந்து தொடங்கி, ஜெயம் ரவியின் இழப்பால் ஏற்படும் சம்பவங்களை நோக்கி நகர்கிறது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி உயிருடன் இருக்கிறார் என்ற ட்விஸ்ட் உடன் தொடரும் டிரைலர், விக்ரமின் கோபத்துடன் நகர்கிறது. ஆதித்த கரிகாலனான விக்ரமை கொலை செய்ய பாண்டிய ஆபத்துதவிகளும், நந்தினியும் எப்படியெல்லாம் முயற்சிக்கிறார்கள் என்பதை கடந்து, இறுதியாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சியோடு முடிகிறது.

ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார்? அருள்மொழி வர்மனை காப்பாற்றியது யார்? ஊமைராணி என்று சொல்லப்படும் இன்னொரு ஐஸ்வர்யா ராய் யார்? நந்தினியும் ஐஸ்வர்யா ராயும் ஒரே நபரா? இருவரும் எப்படி ஒரே போல் இருக்கிறார்கள்? வந்தியத்தேவன் எடுத்த காரியத்தை முடித்தானா? குந்தவையிடம் தனது காதலை சொன்னானா? வானதி என்ன ஆனாள்? சரத் குமாருக்கு என்னவாயிற்று? மதுராந்தகன் ஏன் பாண்டியர்களுடன் இணைந்தான்? இறுதியில் ராஜ்ஜியத்தை கைப்பற்றியது யார்? என்று பல்வேறு கேள்விகளை டிரைலர் விட்டுச் சென்றுள்ளது.

Advertisement

அதேபோல் ஆதித்த கரிகாலானாக நடித்திருக்கும் விக்ரமும், நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். நாவலில் சண்டைக் காட்சிகள் இல்லையென்றாலும் படத்தில் ஜெயம் ரவிக்கு அதிக சண்டைக் காட்சிகள் வைத்துள்ளது ரசிகர்களுக்கு ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top