நடன இயக்குனராக பலருக்கும் அறிமுகமான பிரபுதேவா இப்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து வருகிறார். குறிப்பாக நடிகராக இவர் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றி பெற்று வர நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் சில படங்களை இயக்கியிருந்தாலும் ஹிந்தியில் இவர் இயக்கி திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வருவதால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். அந்த வகையில் சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளியான ராதே படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பஹீரா. அனேகன் பட கதாநாயகி அமைரா தஸ்தூர் ஜோடியாக நடித்துள்ளார். பிரபுதேவா 3 கண்களுடன் வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் இப்படத்தில் மிரட்டியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இப்படத்தின் ட்ரெய்லர் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஜனனி, ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சோனியா அகர்வால், சாக்ஷி அகர்வால் என பலரும் ட்ரெய்லரில் தோன்றி ஆச்சரியம் கொடுத்தனர். த்ரில்லருக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்த படத்தை பரதன் பிலிம்ஸ் தயாரித்து இருக்க கணேசன் சேகர் இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள பஹீரா திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அண்மை காலமாக அடல்ட் காமெடி ஜானர் படங்கள் ரசிகர்களிடையே வெற்றிபெற்றுள்ளதால், இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமைரா தஸ்தூர் உள்ளிட்ட நாயகிகள் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்துள்ளனர்.
ட்ரெய்லர் தொடக்கத்திலேயே கெட்ட வார்த்தையுடன் தொடங்குகிறது. இடைஇடையே கவர்ச்சி காட்சிகள், காதலுக்கும், காதலிக்கும் உண்மையாக இருக்கும் ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிகப்பு ரோஜாக்கள், மன்மதன், ஆளவந்தான் என படங்களை எடுத்துக்காட்டாக கூறுவதால், அதே பாணியிலான படம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
