Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாசிவகார்த்திகேயன் கதையில் நடிக்கும் பிரதீப்.. விக்னேஷ் சிவனின் அடுத்த ப்ராஜெக்ட்

சிவகார்த்திகேயன் கதையில் நடிக்கும் பிரதீப்.. விக்னேஷ் சிவனின் அடுத்த ப்ராஜெக்ட்

- Advertisement -

எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தாண்டி தாண்டி தன்னுடைய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். நடிகர் சிவகார்த்திகேயன் உடைய 17 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்தது.

ஆனால் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் விக்னேஷ் சிவனே இந்த திரைப்படத்தில் இயக்குனராக பணி செய்யக்கூடாது என்று விலக்கி விட்டது. அதன் பிறகு தான் ராஜேஷ், மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை இயக்கினார்.

- Advertisement -

தற்போது தல 62 படத்திலிருந்தும் விக்னேஷ் சிவன் மீண்டும் லைக்காவால் நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு கமல்ஹாசன் நிறுவனம் கை கொடுத்துள்ளது.  குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனரும் நடிகருமான பிரதப் ரங்கநாதனே தான் எடுக்கப் போகும் திரைப்படத்திற்கு கதாநாயகனாக தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

- Advertisement -

மேலும் பிரதீப் ரங்கநாதனும் இந்த திரைப்படத்தில் நடிக்க போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பதை குறிக்கி எல் ஐ சி என்று பேரிடப்பட்டுள்ளது தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசனின் உடைய தயாரிப்பு நிறுவனமான ஆர் கே எஃப் ஐ கம்பெனி தயாரிக்க உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும்  இரண்டாவது திரைப்படம் இது ஆகும். இந்த திரைப்படத்திற்கு இவர்கள் செலவிட இருக்கும் பட்ஜெட் 45 கோடியாகும். அதற்கு காரணம் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தின் வசூல்75 கோடி ஆகும்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஓ டி டி யில் வெளியிடப்பட்டதற்கு பிறகும் சில திரையரங்குகளில் 100 நாள் வரை ஓடி சாதனை படைத்தது.அந்த நம்பிக்கையில் தான் இப்படி ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதனுக்கு இருக்கும் வரவேற்பை பார்க்கும் பொழுது இந்த முயற்சி நிச்சயம் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular