Entertainment

இந்தியில் ரீமேக்காகும் லவ் டுடே… யாரு தயாரிப்பாளர்னு கொஞ்சம் பாருங்க.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த இந்தப்படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் பிரதீப் ரங்கநாதன். ‘கோமாளி’ படத்தில் பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஒருவர் அதிலிருந்து மீண்ட பின்னர் என்னென்ன பிரச்சனையெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லப்பட்டது. ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் 90 கிட்ஸ்கலை கவரும் விதமாக வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு தனது இரண்டாவது படமாக ‘லவ் டுடே’ படத்தை
இயக்கினார் பிரதீப். இப்படத்தை இயக்கியதுடன் நடிகராகவும் அரிதாரம் பூசினார் பிரதீப். ரொமாண்டிக் காமெடி படமான இதில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்தார். மேலும் ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ‘லவ் டுடே’ படத்தில் நடித்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. கடந்த ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கைப்போடு போட்டது.

Advertisement

மேலும் 100 நாள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. அண்மையில் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கி 100வது நாள் விழாவை படக்குழு கொண்டாடியது. இதனிடையே தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வந்த நிலையில் போனி கபூர் தயாரிப்பதாக தகவல் வெளியானது. அதனை மறுக்கும் வகையில் போனி
கபூர் இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனம் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் நடிகர், நடிகைகள் மற்றும்
தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top