Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கிய நாட்டு நாட்டு பாடல்!-இந்திய சினிமாவிற்கு மீண்டும் ஒரு கோல்டன்...

கோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கிய நாட்டு நாட்டு பாடல்!-இந்திய சினிமாவிற்கு மீண்டும் ஒரு கோல்டன் குளோப் விருது!

மகதீரா பாகுபலி போன்ற திரைப்படங்களின் மூலம் இந்த இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவையும் தெலுங்கு சினிமாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமௌலி . இவருடைய இயக்கத்தில் கடந்த வருடம் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆர்ஆர்ஆர்.

- Advertisement -

இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையம் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படம் கடந்த வருடத்தில் மட்டும் 1200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது .

இந்த திரைப்படமானது ஆஸ்கர் விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது நாம் அறிந்ததே . இந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கார் விருதுகளின் பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தது .

- Advertisement -

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிகளை ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் ஜெரோட் கார்மைக்கேல் தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

இந்த விருதுகளின் பட்டியலில் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படங்கள் மற்றும் சிறந்த பாடலுக்கான விருது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான விருதை இந்த வருட கோல்டன் குளோப் நிகழ்வுகளில் கைப்பற்றியுள்ளது .

கடந்த 2009 ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்காக ஜெய் ஹோ பாடலுக்கு கோல்டன் குளோப் விருதை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இந்திய இசையமைப்பாளர் கீரவாணி நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் பெற்றிருக்கிறார். இது இந்திய சினிமா ரசிகர்களுக்கும் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது . மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுகளிலும் இறுதிப்பட்டியலில் இந்த பாடல் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

Most Popular