அண்ணாத்த, தர்பார் படத்தின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அவரது சம்பளம் வெகுவாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் சூழலில் ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கம்பேக் கொடுக்க காத்திருக்கும் ரஜினி
ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகும் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த மாதம் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் ஜெயிலர் ஹிட்டடிக்கும். அண்ணாத்த, தர்பார் படங்களின் தோல்விக்கு ரஜினியும், பீஸ்ட் படத்தால் கலாய்க்கப்பட்ட நெல்சனும் இதில் தரமான கம்பேக் கொடுப்பது உறுதி எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டிச்சேரியில் பிஸியாக உள்ள ரஜினி
ஜெயிலர் படத்துக்கு பிறகு தனது மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் தற்போது நடித்துவருகிறார் ரஜினி. இதில் விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர் மொத்தம் 50 நிமிடங்கள்வரை படத்தில் வருவார் என கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் இப்போது புதுச்சேரியில் நடந்துவருகிறது.


எதிர்பார்ப்பில் தலைவர் 170
இதற்கிடையே ஜெயிலர், லால் சலாம் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளைவிட ஒரு மடங்கு அதிகம் இருப்பது ரஜினி நடிக்கவிருக்கும் அவரது 170ஆவது படத்தில் ஏனெனில் அந்தப் படத்தை இயக்குவது ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் யார் யார் பணியாற்றப்போகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே படத்தின் கதை எனன் என்பது குறித்து பலரும் யோசித்துவந்த சூழலில் ஜெய் பீம் போலவே இந்தப் படமும் உண்மைக் கதையை மையப்படுத்திதான் எடுக்கப்படவிருக்கிறது இதில் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடிப்பார் என்று கூறப்பட்டது.
ஷூட்டிங் எப்போது?
கதையில் ரஜினிகாந்த் கன்னியாகுமரி எஸ்பியாக நடிப்பார். ஆனால் அவரை வைத்து அங்கோ இல்லை நாகர்கோவிலிலோ ஷூட்டிங் எடுப்பது ரிஸ்க் என கருதும் படக்குழு திருவனந்தபுரத்தில் ஒரு செட் போட்ட் ரஜினி சம்பந்தமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட்டில் தொடங்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

