Monday, December 11, 2023
- Advertisement -
HomeEntertainmentஒருவழியாக ரசிகர்களுக்கு பிறந்த நம்பிக்கை.. 'ஜெய் பீம்' ஞானவேல் இயக்கத்தில் ரஜினி.. இதுவும் உண்மைக் கதைதானாம்!

ஒருவழியாக ரசிகர்களுக்கு பிறந்த நம்பிக்கை.. ‘ஜெய் பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி.. இதுவும் உண்மைக் கதைதானாம்!

அண்மையில் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரும் விமர்சனத்தையும், தோல்வியையும் சந்தித்தன. ரஜினியின் கேரியரில் பல வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்திருப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்திருக்கின்றன.

- Advertisement -

இதனையடுத்து ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு நெல்சன் திலீப்குமாரே இயக்குநராக அறிவிக்கப்பட்டார். படத்துக்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை எனவும் சொல்லப்படுகிறது

இந்நிலையில் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. தற்போது அதற்கான விடையை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் எனவும் 2024ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

த.செ. ஞானவேல் ஜெய் பீம் படத்தை உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருந்தார். தற்போது இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் கூறுகின்றனர். ஜெய்பீம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநருடன் ரஜினிகாந்த் கைகோர்த்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

Most Popular