இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படம் உருவாகி வருகிறது. ஜெயமோகன் எழுத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கின்றனர். காஜல் அகர்வால், சமுத்திரகனி, பாபிசிம்ஹா, சித்தார்த், ராகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர். இந்த படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை, பீஹார், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்கு இதன் படப்பிடிப்பு சென்னையில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம்சரணை வைத்து திரைப்படம் இயக்குகிறார். அதில் நடிகை கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். தற்போது அந்த படப்பிடிப்பை இயக்குநர் ஷங்கர் நடத்தி வருகின்றார். இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் RC15 படத்தளத்திற்கு வந்துள்ளேன் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ராம் சரண் படத்தின் பாடல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்த பாடம் முடிவடைந்த பின் படக்குழுவினர் ராம் சரணின் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதனிடையே இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
