தமிழில் சுல்தான் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இந்தியாவின் நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தானா, கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு டியர் காம்ரேட் , சரிலேக்கு நீ எவரு, புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு வந்துள்ளார்.
தற்போது தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விக்ரம் 61 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முதல் முறையாக இயக்குனர் பா. ரஞ்சித்தும் சியான் விக்ரமும் கைகோர்த்து படம் ஒன்றில் பணியாற்றுகின்றனர்.
இந்த படத்திற்கான பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம்க்கு ராஷ்மிகா மந்தானா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் தெலுங்கு மார்க்கெட்டை மையமாக வைத்து இந்த முடிவு பட குழுவால் எடுக்கப்பட்டுள்ளது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் எப்படி கதாநாயகிக்கு ஒரு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதேபோல் விக்ரம் 61 திரைப்படத்தில் ஸ்ட்ராங்கான ரோல் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.
வாரிசு, விக்ரம் 61 என அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களுடன் ராஸ்மிகா இணைந்துள்ளதால் அவருடைய தமிழக மார்க்கெட்டும் விரிவடைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே அவர் புஷ்பா படத்தில் நடித்து ஏ சாமி என்ற பாடல் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனால் பல்வேறு முன்னணி நடிகர்களும் தங்களது தெலுங்கு மார்க்கத்தையும் கருத்தில் கொண்டு ராஷ்மிகா, சமந்தா ஆகியோரை தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டு வருகின்றனர். நட்சத்திரங்கள் நகர்கின்றன திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது விக்ரம் 61 திரைப்படத்திற்காக பா ரஞ்சித் படப்பிடிப்புக்கான பணியை தொடங்கி விட்டார்.
இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் தெய்வத் திருமகள், தாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விக்ரம் 61 படத்திற்காக இணைந்துள்ளார்.இந்த படத்தை ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எடுக்கிறார். வரலாற்று கதை ஆன எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 3டியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்திற்கு மைதானம் என பெயரிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. பண்டைய காலத்தில் விளையாட்டில் எவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தப்பட்டனர் என்பது குறித்து இந்த படம் பேசும் என தகவல் வெளியாகியுள்ளது.