சினிமா

ஆஸ்கரின் இறுதிப் பந்தயத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடல்!- ஆஸ்கரை நோக்கி ஆர்ஆர்ஆர் திரைப்படம்!

கடந்த வருடம் தென்னிந்திய சினிமாவிற்கு ஒரு பொற்காலம். தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . வசூல் சாதனையில் மட்டுமல்லாது திரைப்படங்கள் பெருமளவில் வெற்றியும் பெற்றன. கேஜிஎஃப்-22 ஆர்ஆர்ஆர்,பொன்னியின் செல்வன்,விக்ரம், புஷ்பா மற்றும் காந்தாரா போன்ற திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றவையாகும் .

இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்,ராம்சரண்,அஜய் தேவ்கான்,ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் வெளியான “ஆரஆர்ஆர் ” திரைப்படம் கடந்த ஆண்டு வசூல் சாதனையில் மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் . இந்தத் திரைப்படத்திற்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு இசையமைத்ததற்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு அடுத்து இந்தியாவிலிருந்து கோல்டன் குளோப் விருதை பெற்றவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது . இந்நிலையில் இந்தப் படக் குழுவின் மூலம் இந்திய சினிமாவுக்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுகளிலும் ஒரிஜினல் பாடலுக்கான விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

95 ஆவது ஆஸ்கார் விருதுகள் வருகின்ற மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது . இந்த விருதுகளில் பங்கு பெறுவதற்காக உலகெங்கிலும் இருந்து திரை துறையைச் சார்ந்த பல்வேறு படைப்பாளிகள் தங்களது படங்களை சமர்ப்பித்திருந்தனர் . இந்த விருதுகளுக்காக ஆர்ஆர்ஆர் படக் குழுவும் ஒரிஜினல் பாடலுக்கான விருது பிரிவில் அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலை சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில் ஆஸ்கார் விருது வழங்கும் குழுவானது பரிந்துரைக்கப்பட்ட படங்கள் மற்றும் பாடல்களில் இருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து இறுதிப்பட்டியலை தயார் செய்து இருக்கிறது . இந்தப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் இடம் பெற்று இருக்கிறது. இந்த இறுதி பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் என்பதால் நிச்சயமாக ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கும் திரை துறையினருக்கும் ஏற்பட்டு இருக்கிறது . இந்த மகிழ்ச்சியை அவர்கள் சமூக வலைதளங்களின் மூலமாக கொண்டாடி வருகின்றனர் ..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top