Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஅயோத்தி 50வது நாள் விழா..! வருத்தப்பட்டு பேசிய நடிகர் சசிகுமார்

அயோத்தி 50வது நாள் விழா..! வருத்தப்பட்டு பேசிய நடிகர் சசிகுமார்

- Advertisement -

நடிகர் சசிகுமாருக்கு அயோத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சசிகுமாருக்கு இது ஒரு கம் பேக் ஆக அமைந்திருந்தது. இந்த நிலையில் அயோத்தி திரைப்படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலைஞர்கள் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார் அயோத்தி திரைப்படம் தனது திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது ஒன்று என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த படத்தை நான் பார்த்துவிட்டு வருத்தப்பட்டதாக கூறினார். காரணம் தான் மிகவும் நேசித்த பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை என்றும் அவர்கள் மட்டும் இருந்திருந்தால் அயோத்தி படத்தை தைரியமாக அவர்களுக்கு போட்டுக் காட்டி இருப்பேன் என்றும் கூறினார்.

- Advertisement -

அயோத்தி திரைப்படத்தை போல் இயக்குனர் மகேந்திரன் நண்டு என்று ஒரு படத்தை இயக்கியதாகவும், அதில் இதேபோன்று லக்னோவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு குடும்பம் வருவது போல் படமாக்கியதாகும் கூறினார். ஆனால் இந்த படத்தில் முதலில் லக்னோ மக்கள் முழுக்க முழுக்க ஹிந்தியில் பேசி நடித்திருந்ததாகவும் ஒரு பாடல் முழுவதுமே ஹிந்தியில் வந்திருந்ததாகவும் கூறினார்.

ஆனால் இந்த படத்தை விநியோகிஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை என்றும் ஹிந்தியில் இருந்தால் யாருக்கும் புரியாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி அனைத்தையும் தமிழில் இயக்குனர் மகேந்திரன் மாற்றியதாக சசிகுமார் குறிப்பிட்டார். மகேந்திரனின் இந்த தீராத குறையை தற்போது தங்களுடைய அயோத்தி திரைப்படம் தீர்த்து வைத்து விட்டதாக கூறினார்.

இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மகேந்திரனின் புதல்வன் ஜான் மகேந்திரன், அப்பாவின் ஆன்மா மேலிருந்து இந்த படத்தை பார்த்து மகிழ்ச்சி பெரும் என்று கூறியதை நடிகர் சசிகுமார் நினைவுக் கூர்ந்தார். இந்த படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சசிகுமார். நல்ல படம் என்றுமே ஜெயிக்கும் என்பதை தமிழக மக்கள் நிரூபித்து விட்டதாக கூறினார்.

Most Popular