Sunday, April 6, 2025
- Advertisement -
Homeசினிமாதுணிவிலிருந்து வாரிசுக்கு மாறிய தியேட்டர்கள்.. என்ன காரணம்?

துணிவிலிருந்து வாரிசுக்கு மாறிய தியேட்டர்கள்.. என்ன காரணம்?

- Advertisement -

வரும் பொங்கலுக்கு அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணிக்கு ரிலீஸ் ஆனது. அஜித் ரசிகர்களிடையே இந்த ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

மேலும் பீஸ்ட் திரைப்படம் போல் இருப்பதாக விமர்சனம் எழுந்தது சற்று பின்னடைவாக கருதப்பட்டது. இந்த நிலையில் துணிவு படத்தை பொங்கலுக்கு வெளியிட ஒப்பந்தம் செய்த பல்வேறு திரையரங்குகள் தற்போது வாரிசுக்கு மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் பல திரையரங்குகள் துணிவு படத்தில் இருந்து வாரிசுக்கு மாறியுள்ளனர். மதுரை சோழவந்தான் எம் வி எம் திரையரங்கு துணிவு படத்தை ஒப்பந்தம் செய்து இருந்தது.

- Advertisement -

தற்போது அவர்கள்  தங்கள் திரையரங்கில் வாரிசு வெளியிட உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதேபோன்று திண்டுக்கல் வத்தலகுண்டுவில் உள்ள பரிமளம் சினிமாஸ் வாரிசு படத்தை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று திண்டுக்கல்லில் உள்ள விஜய் திரையரங்கம் துணிவு படத்திலிருந்து பின்வாங்கி வாரிசை வெளியிட உள்ளதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். துணிவு படத்தில் சண்டை காட்சிகள் மிக அதிகமாக இருப்பதாலும் குடும்பத்துடன் பார்க்க ஏதுவாக இருக்காது என்பதாலும் துணிவு படத்தை திரையரங்கால் மாற்றி விட்டதாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

ஆனால் துணிவு பட குழு மதுரை திண்டுக்கல் பகுதிகளில் தேவைக்கு அதிகமாக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் இதனை அடுத்து வாரிசுக்கு குறைவான அளவில் திரையரங்குகள் இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதனை அடுத்து இரு படங்களுக்கும் சரிசமமான அளவில் திரையரங்குகள் கிடைத்தால் தான் மக்களுக்கு படம் பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதால் தற்போது 20% திரையரங்குகள் வாரிசை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

Most Popular