Monday, October 2, 2023
- Advertisement -
HomeEntertainmentஅஜித் வீட்டுக்கு மருமகளாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்… ஷாலினி அண்ணனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரல்…...

அஜித் வீட்டுக்கு மருமகளாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்… ஷாலினி அண்ணனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரல்… முத்தத்துக்கு புது விளக்கம் கொடுத்த ரிச்சர்ட்!

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட். இவர் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனர் ஆவார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. பின் இவர் பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் இவருக்கு என ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்து இருந்தார் ரிச்சர்ட். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் தான் ‘திரௌபதி’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஹீரோவாக ரிச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரிச்சர்ட். இதுதொடர்பான அறிவிப்பை ஏற்கனவே மோகன் ஜி அறிவித்து இருந்தார்.

இந்தப் படத்திற்காக அவர் தயாராகி வரும் நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் உடன் ரிச்சர்ட் ரிஷி நெருக்கமாக உள்ளார். இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

யாஷிகா ஆனந்த் தனக்கு முத்தமிடும் போட்டோவை பகிர்ந்துள்ள ரிச்சர்ட் அதற்கு கேப்ஷனாக ‛‛சில இடங்களில் சூரியன் நம்மை முத்தமிடும் போது…” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு போட்டோவில் முத்தமிட்ட பின் என யாஷிகா உடன் நெருக்கமாக உள்ள மற்றொரு போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

இதை வைத்து இருவரும் காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது. இதுதொடர்பாக யாஷிகா எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இருப்பினும் நடிகை அஜித் வீட்டிற்கு விரைவில் மருமகளாக போவதாக பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular