சினிமா

பம்பரம் போல் சுழலும் ஷங்கர்.. இந்தியன் 2  படத்தின் அப்டேட் இதோ

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படும் இயக்குனர் சங்கர் தற்போது படு பிசியாக இருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை எடுக்கும் சங்கர் அதற்காக பகல் இரவு என வேலை செய்து வருகிறார். 2.0 பிறகு தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்காத சங்கர் பிறகு கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை தொடங்கினார். இதில் தயாரிப்பாளருக்கும் ஷங்கருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மேலும் படபிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் அந்தப் படத்தை தொடங்க முடியாத காரணத்தால் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று கூறிவிட்டு இயக்குனர் சங்கர் தெலுங்கு பக்கம் திரும்பினார். ட்ரிபிள் ஆர் படத்தில் நடித்த பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள ராம் சரணை இயக்குனர் சங்கர் இயக்கி வந்தார். விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தை மீண்டும் படக்குழு தொடங்கியது.

இந்தியன் 2 திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கிய காட்சிகளை திருப்பதியில் நடிகர் சங்கர் தற்போது எடுத்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிகைகளின் தோற்றம் மாறிவிட்டது. அதனை சரிகட்டும் முயற்சி தற்போது ஷங்கர் எடுத்து வருகிறார். இன்னும் இரண்டு மாதத்தில் indian 2 படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிடும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வரும் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்திற்காக அதற்கு சில காலம் கேப் விட்டார். தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ராம் சரணை வைத்து படத்தை இயக்கும் பணிக்கு சங்கர் செல்ல உள்ளார். இதனால் சங்கரின் துணை இயக்குனர்கள் இந்தியன் 2 படத்தை முடிக்க இருக்கிறார்கள். அதனை சங்கர் மேற்பார்வை மட்டும் செய்ய உள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை சங்கர் எடுத்து வருவது கோலிவுட் வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top