Monday, October 2, 2023
- Advertisement -
HomeEntertainmentபாண்டிச்சேரிக்கு பயணமான லால் சலாம் படப்பிடிப்பு… ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுப்பதாக தகவல்… விறுவிறுப்பான சூட்டிங்கால்...

பாண்டிச்சேரிக்கு பயணமான லால் சலாம் படப்பிடிப்பு… ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுப்பதாக தகவல்… விறுவிறுப்பான சூட்டிங்கால் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தயார்

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்தார் ரஜினிகாந்த். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிம்ப்ஸுடன் சமீபத்தில் வெளியானது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மெகா ஹிட்டாகும் என நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே லால் சலாம் படத்தில் கமிட்டானார் ரஜினி. அதனை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் படம் முழுக்க அவர் நடிக்கவில்லை. 40லிருந்து 50 நிமிடங்கள்வரை அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். லால் சலாமின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் ரஜினி பங்கெடுத்துள்ளார்.

- Advertisement -

ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் பாய் கேரக்டரின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. பாட்ஷா படத்துக்கு பிறகு இஸ்லாமியர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஆனால் அந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டரையும், அவரது லுக்கையும் வடிவமைப்பதில் ஐஸ்வர்யா கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என பலர் சமூக வலைதளங்களில் கூறினர்.

மும்பையை தொடர்ந்து மீதம் இருக்கும் ரஜினியின் காட்சிகள் சென்னையில் செட் போடப்பட்டு நடக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கெட்டப்பில் நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி உள்ளது. பாண்டிச்சேரியில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. விறுவிறுப்பாக படபிடிப்பு நடைபெற்று வருவதால், விரைவில் திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Most Popular