Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாபாய்ஸ் படத்தில் மவுண்ட் ரோடில் ஓடிய சீன்.! என் உயிரே போச்சு.. சித்தார்த் ஓபன் டாக்

பாய்ஸ் படத்தில் மவுண்ட் ரோடில் ஓடிய சீன்.! என் உயிரே போச்சு.. சித்தார்த் ஓபன் டாக்

மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்து பிறகு ஹீரோவானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படம் தான் தமிழில் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார்.

- Advertisement -

சென்னையில் 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது பல்வேறு சமூக சேவைகளை செய்து சித்தார்த் பாராட்டுகளை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சித்தார்த் பாய்ஸ் படத்தில் மவுண்ட் ரோட் சாலையில் நிர்வாணமாக ஓடியது எப்படி என்பது குறித்து முதல்முறையாக பேசினார்.

- Advertisement -

நான் அந்த காட்சி நடித்து முடித்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகப் போகிறது.  ஆனால் நான் எங்கு சென்றாலும் எப்படி ஆடை இல்லாமல் மவுண்ட் ரோடில் ஓடினீர்கள் என்று தான் அனைவரும் கேட்பார்கள். அது செட்டெல்லாம் கிடையாது. உண்மையிலேயே மவுண்ட் ரோடில் தான் நான் ஓடினேன்.

- Advertisement -

அந்த காட்சி மட்டும் எட்டு நாட்கள் எடுக்கப்பட்டது. சினிமாவில் நாம் நினைப்பது அனைத்தும் நடக்காது என்பதற்கு அந்த ஒரு காட்சி போதும். நான் உண்மையிலே ஆடை இல்லாமல் தான் ஓடினேன். அப்போது என்னை நகுள் பைக்கில் வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.

அப்போது எங்கள் மேல் ஒரு ஆட்டோ பாய்ந்து செல்வது போல் காட்சியை எடுக்க இயக்குனர் சங்கர் திட்டமிட்டு இருந்தார். அப்போது என் தலைக்கு மேல் ஆட்டோ செல்லும் வகையில் நான்கு மீட்டர் தூரம் இருக்கும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

அப்போது சாலை பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக தண்ணீர் எல்லாம் தெளிக்கப்பட்டது. நான் உதவி இயக்குனராக இருந்த அனுபவம் மூலம், நக்குலிடம் சண்டை பயிற்சியாளர் ரெடி ரெடி என்று உன்னை அவசரப்படுத்துவார். இதனால் நீ டென்ஷன் ஆகாமல் பொறுமையாக வண்டியை ஓட்டு. முதல் கீரையிலே செல் இருபது கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல வேண்டாம்.

ஏனென்றால் சாலை தண்ணீராக இருப்பதால் நாம் வழுக்கி விழுந்து விடுவோம் என்று கூறினேன். ஆனால் நான் சொன்னதை கேட்காமல் அதிக பிரசிங்கித்தனமாக நகுள் செயல்பட்டார். எடுத்தவுடனே பைக்கை வேகமாக இயக்கியதால் அது திடீரென்று நின்றது. இதனால் ஆட்டோ எங்கள் மீது மோத வந்தது.

நான் நக்குலை திருப்பி தள்ளினேன் அப்போது ஆட்டோவின் பின் சக்கரம் என் தோல் மீது பட்டது. மீண்டும் அவர் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை இயக்கியதால் நாங்கள் சறுக்கி விட்டு கீழே விழுந்தோம். என்னுடைய காலில் உள்ள தோல் அனைத்தும் பிய்த்து கொண்டு வந்தது.

இதனை அடுத்து என்னை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றார்கள். இந்த காட்சியை தொடர்ந்து எட்டு நாட்களாக எடுத்தார்கள். நானும் எட்டு நாட்களாக ஆடை இன்றி மவுண்ட் ரோடில் ஓடினேன் என்று சித்தார்த் கூறியுள்ளார்.

Most Popular